News December 17, 2025

BREAKING: ஈரோட்டில் நாளை மதுக்கடைகள் மூடல்!

image

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அவர் வருகை புரியும் வழியில் மற்றும் கூட்டம் நடைபெறும் இடங்களில் இடையூறுகள் ஏற்படாமல் இருக்க ஏதுவாக, வருகைக்கு அருகில் உள்ள மற்றும் கூட்டம் நடைபெறும் இடங்களில் அரசு மதுபான கடைகள் நாளை 18.12.2025 நண்பகல் 12.00 முதல் மாலை 4.00 மணி வரை மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Similar News

News December 20, 2025

ஈரோடு அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

image

புஞ்சைபுளியம்பட்டி அருகே வெங்கநாயக்கள்பாளையம், தேசிபாளையம், புங்கம்பள்ளி, தாசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கோவில்களின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள், குத்துவிளக்கு. சாமிக்கு அணிவிக்கப்பட்ட தங்க நகை மற்றும் உண்டியல் காணிக்கை ஆகியவற்றை திருடிய வெங்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தன்ராஜ் (வயது 34), கோவையை சேர்ந்த தர்மராஜ் (32) ஆகியோர் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

News December 20, 2025

ஈரோட்டில் யார் அதிகம் தெரியுமா?

image

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 16,71,760 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 8,06,914 பெண் வாக்காளர்கள் 8,64,682 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 164 பேர் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் சுமார் 3,25,429 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 20, 2025

ஈரோட்டிற்கு கூடுதலாக ரூ.400 கோடி!

image

ஈரோடு மாவட்டத்துக்கு இந்த ஆண்டு பயிர்க்கடன் வழங்க கூடுதலாக ரூ.400 கோடி அரசிடம் கேட்டு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்த தொகை டிசம்பர் மாதம் வந்து விடும் என இருந்தோம். ஆனால் வரவில்லை. அப்படி ஏதேனும் தொகை வந்தால் 31-ந் தேதிக்குள் கடன்கள் வழங்கப்படும் என ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா தகவல் தெரிவித்தார்.

error: Content is protected !!