News December 18, 2025
BREAKING ஈரோட்டிற்கு கடும் நெருக்கடி: CM ஸ்டாலின்

அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விரைவில் களைந்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். வரி விதிப்பால் பல லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது. குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய ஊர்களின் ஏற்றுமதித் துறைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை விரைவில் தீர்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்
Similar News
News December 25, 2025
கோபி: தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர்

கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதியை சார்ந்த பல்வேறு மாற்று கட்சியில் இருந்து விலகிய 25 க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்ட செயலாளர் பிரதீப் குமார் முன்னிலையில் இன்று தங்களை இணைத்துக் கொண்டனர். உடன் மாவட்ட இணை செயலாளர் பிரபு, பொருளாளர் வினோஜ், மேற்கு நகர செயலாளர் சிந்து உட்பட பலர் இருந்தனர்.
News December 25, 2025
ஈரோடு வாக்காளர்களே சூப்பர் UPDATE!

ஈரோடு மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
News December 25, 2025
ஈரோடு: 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் அரசு வேலை!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.19,500 முதல் 62,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க மற்றும் மேலும் விவரங்களுக்கு https://www.tnsec.tn.gov.in/ என்ற இணையத்தில் பார்வையிடவும். இதனை வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க


