News January 8, 2026
BREAKING: இபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த அமித்ஷா

டெல்லியில் நேற்று இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, ஆட்சியில் பாஜகவுக்கு பங்கு தர வேண்டும் எனக் கூறி EPS-க்கு அமித்ஷா அதிர்ச்சி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக, அதன் கூட்டணி கட்சிகளுக்கு (TTV, OPS, G.K.வாசன்+) 56 தொகுதிகள் மற்றும் அமைச்சரவையில் 3 இடங்களை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என அமித்ஷா கூறினாராம். இதை கேட்டு அதிர்ந்த EPS, அந்த கோரிக்கையை உடனே நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
Similar News
News January 27, 2026
பிப்ரவரி நடுவில் கூட்டணி முடிவு: பிரேமலதா

பிப்ரவரி மாதம் முழுவதும் நேரம் இருக்கிறது, எனவே நல்ல முடிவெடுத்து பிப்., நடுவில் கூட்டணி பற்றி அறிவிப்போம் என பிரேமலதா கூறியுள்ளார். யார் யாருக்கு எந்த தொகுதி என முடிவு செய்து வேட்பாளர்களை அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை தேமுதிக, தங்களது கூட்டணியை இறுதி செய்யாத நிலையில், நேற்று கவர்னர் தேநீர் விருந்தின்போது தேமுதிகவின் சுதீஷ், அதிமுக தலைவர்களுடன் பேசியது பேசுபொருளானது.
News January 27, 2026
சமஸ்கிருதத்துக்கு ₹2000 கோடி, தமிழுக்கு ₹30 கோடி: அமைச்சர்

கல்வி, 100 நாள் வேலை திட்டம் என பலவற்றுக்கு மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிதி வரவில்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டியுள்ளார். சமஸ்கிருத ஆய்வுக்கு ₹2000 கோடி ஒதுக்கும் போது, தமிழ் செம்மொழி ஆய்வு நிறுவனத்திற்கு ₹30 கோடி கூட கொடுக்கவில்லை என்றும் சாடியுள்ளார். முதியோர் ஓய்வூதிய உள்பட பல திட்டங்களுக்கு, தமிழக அரசு நிதி ஒதுக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
News January 27, 2026
எனர்ஜி தரும் ABC ஜூஸ்!

1 ஆப்பிள், 1 சிறிய பீட்ரூட், 2 கேரட் ஆகியவற்றை சின்ன துண்டுகளாக நறுக்கி அரைத்து ஜூஸ் ஆக்கவும். வடிகட்டத் தேவையில்லை. வேண்டுமெனில் எலுமிச்சைச்சாறு, புதினா சேர்த்துக்கொள்ளலாம். இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின்ஸ் A, B1, B2, B3, B4, B5, B6, B9, C, E, K, பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் என ஏகப்பட்ட சத்துகள் இருக்கின்றன. மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் இந்த ஏபிசி ஜூஸ் பெரிதும் உதவுகிறது. SHARE IT.


