News November 6, 2025
BREAKING: இந்த கட்சியுடன் விஜய் கூட்டணியா?

தவெக பொதுக்குழுவில் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்பட்ட நிலையில், அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சை தொடங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டிடிவியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தவெக எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதா என்பதை பொதுவெளியில் சொல்ல முடியாது என்று பதிலளித்தார். மேலும், விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமையும்; அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 7, 2026
சிகரெட்டை விட ஆபத்தானது இந்த உணவு!

சிகரெட்டுகளை போல அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட உணவுகளும் கூல் டிரிங்ஸ், பிஸ்கட்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சிகரெட் பிடிப்பதை நிறுத்துவது எவ்வளவு கடினமோ, அதேபோல் இந்த உணவுகளை தவிர்ப்பது சவாலானது என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் சிகரெட் பாக்கெட்கள் போல, ஜங்க் உணவுகளிலும் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
News February 7, 2026
தமிழக தேர்தல் தேதி.. முக்கிய தகவல் வெளியானது

TN-ல் தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது வெளியாகும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், இன்னும் 4 நாள்களில் (பிப்.11) ECI துணை ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு தமிழகம் வரவுள்ளார். தேர்தல் தொடர்பான பணிகள், சட்டம்- ஒழுங்கு குறித்து அதிகாரிகளிடம் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார். இதனையடுத்து, இம்மாத இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்காளர்களே, ரெடியா!
News February 7, 2026
காங்கிரஸ் வேண்டாம்.. விஜய்க்கு சீமானின் அட்வைஸ்

காங்கிரஸுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று தான் முன்பு நேரில் சந்தித்தபோது விஜய்யிடம் கூறியதாக சீமான் தெரிவித்துள்ளார். காங்கிரஸை சேர்த்துக்கொள்ளலாமா என விஜய் கேட்டபோது, அவர்களை வைத்துக்கொண்டு எந்த அரசியலை பேச முடியும் என தான் கேள்வியெழுப்பிதாக சீமான் தெரிவித்துள்ளார். கச்சத்தீவு விவகாரம், GST, நீட் என எல்லாவற்றையும் புகுத்தியதே காங்கிரஸ்தான் என விஜய்யிடம் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


