News January 14, 2026

BREAKING: இந்தியா பேட்டிங்!

image

இந்தியாவுக்கு எதிரான 2-வது ODI-ல் NZ டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா பிளேயிங் XI: ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, KL ராகுல், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லுமா இந்தியா?

Similar News

News March 28, 2026

புதிய அவதாரம் எடுக்கும் அஸ்வின்

image

IPL 2026-ல் அஷ்வின் ஒரு புதிய அவதாரம் எடுத்துள்ளார். முதல் முறையாக, அவர் ஜியோஸ்டார் குழுவின் சார்பாக வர்ணனையாளர் மைக்கை பிடிக்க இருக்கிறார். இந்தக் குழுவில் சேவாக், டி வில்லியர்ஸ் மற்றும் ரெய்னா போன்றவர்களுடன் அவரும் இணைந்து வர்ணனை செய்ய உள்ளார். அஸ்வின் பந்துவீச்சு போன்ற வார்த்தைகளிலும் ஜாலம் செய்யக்கூடியவர் என்பதால் அவர் வர்ணனையில் தனது முத்திரையை பதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News March 28, 2026

விரக்தியாக இருந்தால் இதை செய்யலாம்!

image

நீங்கள் கோபமாகவோ அல்லது விரக்தியாகவோ உணரும்போது, ​​அதை மற்றவர்கள் மீது காட்டாமல் வீட்டு வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது, பொருள்களை நேர்த்தியாக அடுக்கி வைப்பது ஆகியற்றை செய்வதன்மூலம் ரிலாக்ஸ் ஆகலாம். இது வீட்டை சுத்தமாக வைத்திருக்க உதவுவதோடு உங்கள் கோபத்தை போக்கவும் உதவும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News March 28, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 646 ▶குறள்: வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள். ▶பொருள்: மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.

error: Content is protected !!