News January 23, 2026

BREAKING: இந்தியாவுக்கு 209 ரன்கள் டார்கெட்

image

2-வது டி20 ஆட்டத்தில் நியூசி., அணி இந்தியாவுக்கு 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. அதிரடியாக பேட்டிங்கை தொடங்கிய அந்த அணி, அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. ரச்சின் ரவீந்திரா(44) மட்டும் சற்று நிலைத்து நின்று ஆடினார். இறுதியில் கேப்டன் சாண்ட்னர் அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்க 20 ஓவர் முடிவில் 208/6 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 2 wkts வீழ்த்தினார்.

Similar News

News February 3, 2026

பெரிய கணக்குடன் திமுக கூட்டணியில் சேரும் தேமுதிக!

image

தங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் இடத்தில் கூட்டணி வைப்போம் பிரேமலதா கடந்த சில நாள்களாகவே வார்த்தை பிசகாமல் பேசி வருகிறார். இந்நிலையில் 18+1 ராஜ்யசபா சீட் என்ற கணக்குடன் திமுக கூட்டணியில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து கடைசி வரை எதிர்பார்த்த ராஜ்யசபா சீட் கானல் நீராய் போனது. இந்நிலையில் ஆளும் திமுக கூட்டணியுடன் தேமுதிக கைகோர்த்துள்ளதாம்.

News February 3, 2026

இளம் வீரனை இழந்தது இந்தியா!

image

தலைமுறை தலைமுறையாக ராணுவத்தில் சேவையாற்றிய ஒரு குடும்பம், தனது இளம் தலைமுறையை இழந்து நிற்கிறது. சிலிகுரியில் பணியில் இருந்த அக்னி வீரர் கரண் சிங், இன்று வீரமரணம் அடைந்துள்ளார். இவரது தந்தை, 2 மாமாக்கள், அக்கா ஆகியோர் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். கரண் சிங்கின் மறைவால் ராஜஸ்தானில் உள்ள அவரது சொந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த வீரனின் இறுதிச் சடங்கு ராணுவ மரியாதையுடன் நாளை நடைபெற உள்ளது.

News February 3, 2026

சென்சார் போர்டு தேவையே இல்லை: சுமன்

image

சென்சார் போர்டு இருப்பதே இப்போது தேவையில்லாதது என நடிகர் சுமன் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் சினிமாவை மட்டும் தான் பார்த்தார்கள் என்ற அவர், ஆனால் இன்று செல்போனிலேயே எல்லாவற்றையும் பார்க்கின்றனர் எனவும், ஆபாசமும் வன்முறையும் அதிகம் உள்ள வெப்சீரிஸுக்கு சென்சாரே இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், மொபைல், ஓடிடி என அனைத்துக்கும் சென்சார் வேண்டும். இல்லையென்றால் அது தேவையே இல்லை எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!