News November 6, 2025
BREAKING: அரசியல் கட்சிகளுக்கு புதிய நெறிமுறை

கரூர் துயரத்தை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், பேரணிகளுக்கு அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. கட்சி கூட்டம் நடத்துவதற்கு குறைந்தபட்சம் 5 நாளுக்கு முன் அனுமதி வழங்கப்படும்; அரசியல் கூட்டங்கள் நடத்த அரசியல் கட்சிகளிடம் ₹1-₹20 லட்சம் வரை வைப்பு தொகை வசூலிக்கப்படும். ரோடு ஷோ நடத்த உள்ள வழித்தடம், உரை நிகழ்த்த உள்ள இடம் குறிப்பிட பட வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 6, 2025
டாப் 10 அசுத்தமான நகரங்கள்.. தமிழ்நாடு நம்பர் 1

இந்தியாவில் நகர்ப்புற தூய்மை குறித்த சமீபத்திய கணக்கெடுப்பு, ஸ்வச் பாரத் மிஷன் ஆண்டு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் கழிவுகளை நிர்வகிப்பதில், சிறிய நகரங்களை விட பெருநகரங்கள் மோசமாக செயல்படுவது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒரு நகரம் நம்மை ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் பண்ணுங்க. SHARE IT.
News November 6, 2025
ராகுலுக்கு, பிரஷாந்த் கிஷோர் ஆதரவு

பிஹார் தேர்தலில், காங்கிரஸும், ஜன் சுராஜ் கட்சியும் எதிரெதிராக களம் காண்கின்றன. இந்நிலையில், ராகுல் காந்தியின் ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுக்கு, ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரஷாந்த் கிஷோர் ஆதரவு தெரிவித்துள்ளார். ECI-க்கு எதிராக ராகுல் எழுப்பும் கேள்விகள் நியாயமானவை என்ற அவர், வாக்குத் திருட்டு பிஹார் தேர்தல் முடிவை மாற்றலாம் என்ற ராகுலின் அச்சத்தை ஏற்கவில்லை எனக் குறிப்பிட்டார்.
News November 6, 2025
பணம் பறிப்பதுதான் ஜாய் கிரிசில்டாவின் நோக்கம்: ஸ்ருதி

பணம் பறிப்பதும், எங்களை பிரிப்பதும் தான் ஜாய் கிரிசில்டாவின் நோக்கம் என மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி பிரியா தெரிவித்துள்ளார். தனக்கு ஒரு வீடு, மாதம் ₹8 லட்சம் வேண்டும் என ஜாய் கிரிசில்டா கேட்பதாகவும், ஊடகங்களை தனிப்பட்ட பொருளாதார லாபத்திற்காக பயன்படுத்துவதாகவும் ஸ்ருதி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், கணவருடன் உறுதியாக நிற்கிறேன், அவரை இறுதி வரை காப்பாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.


