News November 10, 2025

BREAKING: அனைத்து ரேஷன் கார்டுக்கும் முக்கிய அறிவிப்பு

image

ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு நிலவுவதாக EPS குற்றஞ்சாட்டியதற்கு, அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்திருந்தார். அதன்படி, நவ.15-ம் தேதிக்குள் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கோதுமை அனுப்பப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவ., மாதத்திற்கான கோதுமையை இதுவரை பெறாத ரேஷன் அட்டைதாரர்கள், 15-ம் தேதிக்கு பின் ரேஷன் கடைகளுக்குச் சென்று வாங்கிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீங்க கோதுமை வாங்கியாச்சா?

Similar News

News November 10, 2025

Warning: கேன்சர் வர முக்கிய காரணங்கள் இவை தான்!

image

சமீபமாக அதிகரித்து வரும் நோய்களில் ஒன்றான கேன்சர், உணவு, வாழ்க்கை முறை சார்ந்த நோய் என்கின்றனர் கேன்சர் நிபுணர்கள். முக்கியமாக குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் சமநிலை மாறுவது கேன்சர் அபாயத்தை அதிகரிக்குமாம். சுமார் 13 வகையான கேன்சர்களுக்கு முக்கிய காரணம் உடல் பருமன் என கூறும் டாக்டர்கள், இரவில் சரியாக தூங்கவில்லை என்றால் மெலடோனின் அளவு குறைந்து கேன்சர் வரும் என எச்சரிக்கின்றனர்.

News November 10, 2025

FLASH: ஒரே நாளில் விலை தாறுமாறாக ₹4,000 உயர்ந்தது

image

<<18250638>>தங்கத்தை <<>>போன்று வெள்ளி விலையும் இன்று ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. 3 நாள்களாக மாற்றமின்றி காணப்பட்ட வெள்ளி நிலவரம், தற்போது கிலோவுக்கு ₹4,000 அதிகரித்துள்ளது. சென்னையில் 1 கிராம் வெள்ளி ₹169-க்கும் 1 கிலோ வெள்ளி ₹1.69 லட்சத்திற்கும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 1 கிலோ ₹2.07 லட்சம் வரை விற்பனையான வெள்ளி, இந்த மாதம் சரிவை சந்தித்து வந்தது. இந்நிலையில், இன்று பெரியளவில் விலை அதிகரித்துள்ளது.

News November 10, 2025

இம்மாத இறுதியில் வருகிறது VJS-ன் ‘Train’

image

விஜய் சேதுபதி – மிஸ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள Train திரைப்படத்தை நவ.28-ம் தேதி ரிலீஸ் செய்ய, படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ருதி ஹாசன், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு, மிஷ்கினே இசையமைத்துள்ளார். திரில்லர் கதையம்சத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ரிலீஸுக்காக, விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் ரசிகர்கள் நீண்ட நாள்களாக காத்திருக்கின்றனர்.

error: Content is protected !!