News December 14, 2025
BREAKING: அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் அறிவிப்பு

நாடு முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் கட்டாயம் e-KYC செயல்முறையை முடித்திருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இல்லையெனில், ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படும் என்றும், அரசு திட்ட சலுகைகள் பெறுவதில் சிக்கல் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. MERA KYC, FACE RD ஆகிய ஆப்கள் மூலம் செல்போனிலேயே ரேஷன் கார்டு e-KYC-ஐ அப்டேட் செய்யலாம். இதுவரை அப்டேட் செய்யாதவர்கள் உடனே முந்துங்கள்!
Similar News
News December 21, 2025
டாக்கா பல்கலை., ஹாலுக்கு ஹாடி பெயர்

பங்களாதேஷின் டாக்கா பல்கலை.,யில் உள்ள பங்காபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் ஹால், சுட்டுக் கொல்லப்பட்ட ஷாகித் ஷெரீப் உஸ்மான் ஹாடி ஹால் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. Inqilab Mancha அமைப்பின் தலைவரான ஹாடி, சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனையடுத்து, அங்கு மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. அதேநேரம், அவர் 2026 பார்லிமெண்ட் தேர்தலில் போட்டியிட இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
News December 21, 2025
தோனிக்கு பிறகு ஜிதேஷ் சர்மா சிறப்பாக செய்தார்: கவாஸ்கர்

T20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஜிதேஷ் சர்மா இடம்பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இந்நிலையில், ஜிதேஷ் எந்த தவறும் செய்யவில்லை, அவருக்கு கிடைத்த வாய்ப்புகளில் சிறந்த விக்கெட் கீப்பராக இருந்தார் என சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். அத்துடன், MS தோனிக்கு பிறகு DRS-களில் கேப்டனுக்கு சிறப்பாக உதவியுள்ளார் என்றும் ஜிதேஷின் திறமையை சுட்டிக்காட்டியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
News December 21, 2025
ரஜினியிடம் பேசியதில் மிளகு ரசமே கிடைத்தது: தமிழருவி

ரஜினி கட்சி தொடங்காததற்கு தமிழருவி மணியனே காரணம் என்றும், கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே ₹200 கோடியை ரஜினியிடம் வாங்கியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்த தமிழருவி, தான் ரஜினியிடம் இருந்து பணம் ஏதும் வாங்கவில்லை என தெரிவித்துள்ளார். அவரை சந்தித்தபோது மிளகு ரசம் மட்டுமே கிடைத்தது, 3 முறை சந்தித்ததில் 3 கோப்பை மிளகு ரசம்தான் அருந்தினேன் என்றும் கூறியுள்ளார்.


