News November 23, 2025
BREAKING: அதிமுக அறிவித்தது

டிசம்பர் 10-ம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூடும் இப்பொதுக்குழுவில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்தும் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்.
Similar News
News December 1, 2025
குழந்தைகளிடம் இத கொடுக்கவேண்டாம்.. ப்ளீஸ்!

குழந்தைகள் இருக்கும் வீட்டில் பேட்டரி டாய்ஸ் கட்டாயம் இருக்கும். இப்படி நீங்கள் ஆசை ஆசையாய் வாங்கித்தரும் பொம்மையால் குழந்தையின் உயிருக்கே பிரச்னை வரலாம். ஆம், பேட்டரி டாய்ஸில் உள்ள பேட்டரிகளை குழந்தைகள் கழற்றி, வாயில் போட்டு விழுங்க வாய்ப்பிருக்கிறது. அது தொண்டையில் சிக்கினால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு நிலைமை சீரியஸாகிவிடும். எனவே இதனை வாங்கித்தர வேண்டாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். SHARE.
News December 1, 2025
ஷேக் ஹசீனாவுக்கு அடிமேல் அடி!

வங்கதேச EX., PM <<18408820>>ஷேக் ஹசீனாவுக்கு<<>>, சமீபத்தில் மாணவர்கள் போராட்ட வழக்கில் மரண தண்டனையும், அரசு நில ஒதுக்கீடு ஊழல் வழக்கில் 21 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த அடியாக அதே ஊழல் தொடர்பான மற்றொரு வழக்கில், டாக்கா நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. ஷேக் ஹசீனாவின் மருமகளும், பிரிட்டிஷ் MP-யுமான துலிப் சித்திக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
News December 1, 2025
எலும்புகளை வலிமையாக்க இத சாப்பிடுங்க!

நம் உடலின் அஸ்திவாரமாக விளங்கும் எலும்புகளை வலுவாக்குவது மிக அவசியம். எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஒரு உணவு முருங்கைக்காய். இதில், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் உள்ளதால் எலும்பை வலிமையாக்கும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, அதன் ஆரோக்கியம் கூடும். முக்கியமாக குழந்தைகளின் எலும்புக்கு இது மிகவும் நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.


