News February 6, 2026
BREAKING: அதிமுகவுடன் கூட்டணியை அறிவித்தார்

<<19067093>>மருதம் மக்கள் முன்னேற்றக் கழகத்தை<<>> தொடர்ந்து, கொங்குநாடு முன்னேற்ற கழகமும் (கொமுக) அதிமுக கூட்டணியுடன் இணைந்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் தங்கவேலு, கட்சி நிர்வாகிகளுடன் சேலத்தில் EPS-ஐ நேரில் சந்தித்தார். அப்போது, கொமுக நிர்வாகிகளை பூங்கொத்து கொடுத்து EPS வரவேற்றார். 2026 தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு முழு ஆதரவை அளிப்பதாக EPS-யிடம் அவர் கடிதத்தை வழங்கினார்.
Similar News
News February 12, 2026
நடிகர் அர்ஜுன் கழுத்து எரிந்தது.. REWIND

அன்று நள்ளிரவு 2 மணிக்கு அப்பா வந்தார். அவரது கழுத்து எரிந்திருந்தது. அந்த நொடியை என்னால் மறக்கவே முடியாது என நடிகை ஐஸ்வர்யா, தனது அப்பா அர்ஜுன் பற்றி சமீபத்தில் பேசியுள்ளார். ‘முதல்வன்’ பட பாம் பிளாஸ்ட் சீன் எடுக்கும்போது விபத்து ஏற்பட்டு அப்பா கழுத்து எரிந்ததை நினைக்கும்போது இப்போதும் கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது அவரது ரசிகர்களை காயப்படுத்தியுள்ளது.
News February 12, 2026
114 ரஃபேல் விமானங்கள் வாங்க பச்சைக்கொடி!

விமானப்படையைப் பலப்படுத்த ₹3.25 லட்சம் கோடி மதிப்பிலான 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்திற்கு DAC ஒப்புதல் அளித்துள்ளது. பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வரும் 17-ம் தேதி அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வரும்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒப்பந்தத்தில் 80% ரஃபேல் விமானங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 12, 2026
இந்திய அணியில் மீண்டும் சஞ்சு சாம்சன்

T20 WC-ல் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற நமீபியா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. உடல்நல பாதிப்பு காரணமாக அபிஷேக் சர்மா இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு பதில் சஞ்சு சாம்சனும், சிராஜுக்கு பதில் பும்ராவும் அணியில் இணைந்துள்ளனர். முதல் போட்டியில் USA-வை வீழ்த்திய இந்தியா, கத்துக் குட்டி அணியான நமீபியாவை எளிதாக வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


