News November 19, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்

அன்வர் ராஜா, மருது அழகுராஜ், மனோஜ் பாண்டியன் என அடுத்தடுத்து அதிமுக மற்றும் OPS அணியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இந்நிலையில், நேற்று வரை OPS கூடவே இருந்த விருதுநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ் கதிரவன் தனது ஆதரவாளர்களுடன் அமைச்சர் KKSSR முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதேபோல், திருவள்ளூர் அதிமுக கிழக்கு மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் உள்ளிட்டோரும் திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.
Similar News
News March 28, 2026
BREAKING: திமுக கூட்டணிக்கு அதிர்ச்சி

<<19494650>>காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வு<<>> அனைத்தும் ரகசியமாக நடந்ததாகவும் கட்சியின் நலன் சமரசம் செய்யப்பட்டதாகவும் ஜோதிமணி குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக கூட்டணிக் கட்சிகள் குறைவான தொகுதி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து கேட்கும் தொகுதியும் கிடைக்கவில்லை என்ற மனவருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் ஜோதிமணியின் கருத்து திமுக கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. <<-se>>#TNELECTION2026<<>>
News March 28, 2026
வேண்டுமென்றே திட்டமிட்டு தடை: நிர்மல் குமார்

தவெகவுக்கு வேண்டுமென்றே திட்டமிட்டு அனுமதி மறுக்கப்படுவதாக CTR நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார். செயலி மூலம் அனுமதி கோரினால், கேட்கப்பட்ட நேரம் கடந்த பின்னர் அனுமதி தருவதாக சாடினார். பெரும்பாலான அதிகாரிகள் திமுக கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் தங்களது நிர்வாகிகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றார். மேலும், திமுகவுக்கு சாதகமான அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
News March 28, 2026
படிக்காதவர்களுக்கும் அரசு வேலை: சீமான்

நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் படிக்காதவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என்று சீமான் கூறியுள்ளார். திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரத்தின்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பு & வருவாயை உயர்த்துவதாக தெரிவித்தார். நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகளை கொண்டுவந்து அனைவருக்கும் அரசு வேலை தருவோம் என்று கூறினார். மேலும், படிக்காதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்றார். <<-se>>#TNELECTION2026<<>>


