News March 24, 2026
BREAKING: அதிமுகவில் இருந்து விலகினார்

EX அமைச்சர் CV சண்முகத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய விழுப்புரம் நகர செயலாளர் பசுபதி, அதிமுகவிலிருந்து விலகியுள்ளார். தேர்தலில் சீட்டு விவகாரத்தில் CV சண்முகம் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், தனது சாதியை சேர்ந்தவர்களுக்கே கட்சி பதவி வழங்குவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தன்னை போலவே பலர், கட்சியில் இருந்து விலக இருப்பதாக பசுபதி கூறியுள்ளது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 11, 2026
கல்யாணத்துக்கு மறுத்த பெண்ணுக்கு HIV ஊசி

வரன் பார்த்த நபருக்கு HIV தொற்று இருப்பதை அறிந்த பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாப்பிள்ளை வீட்டார், திட்டமிட்டு பெண்ணின் உடலில் HIV தொற்று ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தியுள்ளனர். மேலும், HIV பாதித்த பெண் என்று SM-களில் அவதூறாக பதிவிட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். ஹைதராபாத்தில் நடந்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News April 11, 2026
ChatGPT ஓனர் வீட்டில் குண்டு வீசி தாக்குதல்

ChatGPT நிறுவன CEO சாம் ஆல்ட்மேனின் சான் பிரான்சிஸ்கோ வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்நிலையில், சந்தேகத்துக்குள்ளான 20 வயது இளைஞரை போலீஸ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து கவலை தெரிவித்த ஆல்ட்மேன், AI-க்கு அதிகரித்து வரும் எதிர்ப்பே இந்த தாக்குதல்களுக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
News April 11, 2026
FLASH: ஒன்றாக பயணிக்கும் EPS, உதயநிதி!

EPS, உதயநிதி இருவரும் ஒரே விமானத்தில் பயணம் செய்ய உள்ளனர். சென்னையிலிருந்து மதியம் 12.40 மணிக்கு திருச்சி செல்லும் விமானத்தில் இருவரும் பயணிக்க உள்ளனர். தேர்தல் பரப்புரை களத்தில் இருவரும் மாறி மாறி வார்த்தை மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில், இருவரும் ஒன்றாக பயணிக்கும் விஷயம் கவனம் ஈர்த்துள்ளது. மரியாதை நிமித்தமாக இருவரும் பேசிக்கொள்வார்களா?


