News November 19, 2025
BREAKING: அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்

அன்வர் ராஜா, மருது அழகுராஜ், மனோஜ் பாண்டியன் என அடுத்தடுத்து அதிமுக மற்றும் OPS அணியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இந்நிலையில், நேற்று வரை OPS கூடவே இருந்த விருதுநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ் கதிரவன் தனது ஆதரவாளர்களுடன் அமைச்சர் KKSSR முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதேபோல், திருவள்ளூர் அதிமுக கிழக்கு மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் உள்ளிட்டோரும் திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.
Similar News
News April 4, 2026
கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் மரணம்.. அடுத்த துயரம்

பிஹாரின் துர்க்கவுலியா & ரகுநாத்பூர் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 2016 முதல் பிஹாரில் மதுவிலக்கு உள்ள நிலையில், கள்ளச்சாராயம் குடித்து மரணிக்கும் துயரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2016 முதல் தற்போது வரை கள்ளச்சாராயத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1,300 ஆக உயர்ந்துள்ளது.
News April 4, 2026
சட்டப்பேரவைத் தேர்தலில் மல்லுகட்டும் 3 எம்.பிக்கள்!

ஒருவழியாக அனைத்து கட்சிகளிலும் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி வடிவம் பெற்றுள்ளது. இந்நிலையில், பார்லிமென்ட்டில் அங்கம் வகிக்கும் 3 முக்கிய தலைவர்கள் பேரவைத் தேர்தலிலும் களமிறங்குகின்றனர். அவிநாசி தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக சார்பில் திருமாவளவன், மயிலம் தொகுதியில் அதிமுகவின் CV சண்முகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>
News April 4, 2026
தேமுதிகவை வீழ்த்துவோம்.. பசும்பொன் பாண்டியன் சபதம்

பல்வேறு மன வலிகளுடன் திமுக கூட்டணியை அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் ஆதரிப்பதாக பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார். அதேநேரம், RSS-ன் துணை அமைப்பான சந்தர்ப்பவாத சாதியவாத தேமுதிக, கொமதேக, முக்குலத்தோர் புலிப்படை, தமிழர் தேசம் கட்சிகளுக்கு ஆதரவில்லை என்றும், இந்த கட்சிகள் போட்டியிடும் 14 தொகுதிகளிலும் அவர்களை வீழ்த்துவோம் எனவும் அறிவித்துள்ளார். இது, தேர்தல் களத்தை அதிர வைத்திருக்கிறது.


