News April 8, 2025
BREAKING: ஒரு குவிண்டால் நெல் ₹2,500: அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ₹2500 வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அவர், இந்த புதிய உத்தரவு வரும் செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் எனக் கூறினார். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல், இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News September 18, 2025
உங்களுக்கு தான் போன், போனுக்காக நீங்கள் இல்லை

இன்றைய வாழ்க்கை முறையில் ஸ்மார்ட்போனை தவிர்க்க முடியாது என்பது உண்மை தான். ஆனால், பலருக்கும் அது இல்லாமல் கொஞ்ச நேரம் கூட இருக்க முடிவதில்லை. எப்போதும் போனுடன் இருந்தால் *வேலையில் கவனச் சிதறல் *மனச்சோர்வு *தூக்கம் பாதிப்பு *படிப்பு பாதிப்பு *சக மனிதர்களுடன் பேசுவது குறைந்து போதல் *குடும்ப உறவுகளில் சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என மனநல நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். SHARE IT
News September 18, 2025
BREAKING: நாடு முழுவதும் விலையை குறைத்து அறிவிப்பு

சமீபத்தில் மேற்கொண்ட GST சீர்திருத்தங்களை அடுத்து, மாருதி சுசுகி நிறுவனம், தனது கார்களின் விலையை குறைத்து அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி, ₹46,000 – ₹1.12 லட்சம் வரை குறைத்துள்ளது. Alto Kl0 மாடல் ₹1,07,600 வரையிலும், Ignis – ₹71,300, DZire (₹87,700) Swift (₹84,600), Baleno (₹86,100) போன்றவை குறைந்துள்ளதால், கார் வாங்க நினைப்பவர்களுக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.
News September 18, 2025
கல்கி 2-ம் பாகத்தில் தீபிகா படுகோன் இல்லை

பேன் இந்தியா படமான ‘கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகத்தில் தீபிகா படுகோன் நடிக்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்கி போன்ற படங்களில் நடிக்க முழு ஒத்துழைப்பு தேவை எனவும் நன்கு பரிசீலித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், x தளத்தில் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. ஏற்கெனவே பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்தில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்காவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அவர் விலகியிருந்தார்.