News November 2, 2025
BREAKING: வெள்ளிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும்…

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, திருத்தம் மேற்கொள்ளும் அவகாசம் அக்.31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது, நவ.7(வெள்ளிக்கிழமை) வரை திருத்தம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. பயன்படுத்திக்கோங்க மாணவர்களே!
Similar News
News December 8, 2025
10 வயசு கம்மியா தெரியணுமா? செம்ம TIP!

முகத்தில் கிராம்பு பாதாம் எண்ணெய் தடவி வந்தால் இளமையாக தெரிவீர்கள் என கூறப்படுகிறது. ➤100 மில்லி பாதாம் ஆயிலை சூடுபடுத்தி, அதில் 15 கிராம்பை சேருங்கள் ➤எண்ணெய் நன்கு சூடானதும் அதை கண்ணாடி பாட்டிலில் ஊற்றி பதப்படுத்தி வையுங்கள் ➤தினமும் இரவில் தூங்க செல்லும் முன், முகத்தில் இந்த எண்ணெயை தடவி மசாஜ் செய்யலாம் ➤அல்லது காலையில் குளிக்க செல்வதற்கு அரை மணி நேரம் முன்பு கூட தடவிக்கொள்ளலாம். SHARE.
News December 8, 2025
லோன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான நியூஸ்

ரெப்போ ரேட்டை RBI குறைத்ததால், வங்கிகளும் <<18500891>>வட்டி விகித குறைப்பை<<>> அறிவித்து வருகின்றன. இதனால், நீண்ட கால கடன் பெற்றவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தாண்டு மட்டும் ரெப்போ ரேட் 1.25% குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீங்கள் ₹50 லட்சம் வீட்டுக் கடனை 20 ஆண்டுகள் தவணையில் பெற்றிருந்தால், ஆண்டுக்கு ₹9 லட்சம் வரை மிச்சமாகும். EMI குறைப்புக்கு உடனே வங்கியை அணுகுங்கள். SHARE IT.
News December 8, 2025
களத்திற்கு புறப்பட்ட விஜய்யின் பஸ் முதல் பாஸ் வரை (PHOTOS)

கரூர் சம்பவத்திற்கு பின் திறந்த வெளியில் விஜய் நடத்தும் மக்கள் சந்திப்பு புதுவையில் நாளை நடைபெறவுள்ளது. இதற்காக உப்பளம் மைதானத்தில் மும்முரமாக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 5,000 பேருக்கு பாஸ் வழங்கும் பணிகளில் தவெக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே 72 நாள்களுக்கு பிறகு விஜய்யின் பிரசார பஸ் பனையூரிலிருந்து புதுச்சேரி நோக்கி புறப்பட்டுள்ளது. ஏற்பாடு குறித்த போட்டோஸை மேலே SWIPE செய்து பாருங்க.


