News August 10, 2024
BREAKING: விருதுநகர் மாவட்டத்திற்கு கனமழை

தமிழ்நாட்டில் நாளை மறுநாள்(ஆக.12) விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் கடந்த சில தினங்களாக மிதமானது முதல் கனமழை பெய்து வரும் நிலையில், நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 3, 2025
அருப்புக்கோட்டை: GH கட்டிடம் விரைவில் திறப்பு

அருப்புக்கோட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் டயாலிசிஸ் வசதி, அறுவை சிகிச்சை அரங்குகளுடன் ரூ.34 கோடி மதிப்பில் ஆறு தளங்களுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. பணிகள் முடிந்து 3 மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள கட்டிடம் சில நாட்களில் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News December 3, 2025
விருதுநகரில் 24 மணி நேரத்தில் இவ்வளவு மழையா?

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 74.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருச்சுழி பகுதியில் 21 மில்லி மீட்டர் மழையும் ராஜபாளையம் பகுதியில் 25 மில்லி மீட்டர் மழையும் காரியாபட்டி பகுதியில் 14 மில்லி மீட்டர் மழையும் கோவிலாங்குளம் பகுதியில் 7.60 மில்லி மீட்டர் மழையும் அருப்புக்கோட்டையில் 6.20 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
News December 3, 2025
விருதுநகர்: SBI வேலை.. தேர்வு இல்லை – APPLY!

விருதுநகர் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <


