News August 8, 2024
BREAKING: பல்லடத்தில் வாலிபர் வெட்டி படுகொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவிற்குட்பட்ட கரையான்புதூர் பகுதியில் இன்று காலை மர்ம நபர்களால் துரத்திச் செல்லப்பட்ட வாலிபர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்குச் சென்ற டிஎஸ்பி விஜிகுமார் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி உயிரிழந்தவர் யார்? கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 9, 2025
திருப்பூர்: இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள்

திருப்பூர் மாநகரில் இரவு நேர கொள்ளை சம்பவங்களை தடுத்திடும் வகையில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சேகர் தலைமையில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் குறித்த விவரம் மாநகர காவல் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News December 9, 2025
தாராபுரத்தில் சோகம்: தூக்கிட்டு தற்கொலை!

தாராபுரம் அருகே உள்ள ராமபட்டினத்தைச் சேர்ந்த செல்லதுரை என்ற கூலித் தொழிலாளியின் மகள் தாரணி. இவர் வீட்டில் செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனை தொடர்ந்து பெற்றோர் இருவரும் வெளியே சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த தாரணி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
News December 9, 2025
திருப்பூர்: கொட்டிக்கிடக்கும் வேலைகள் APPLY NOW

1) கேந்திரி வித்யாலயா பள்ளிகளில் 14,967 பேருக்கு வேலை-( https://www.cbse.gov.in/).
2) புலனாய்வுத்துறையில் 362 பேருக்கு வேலை-(https://www.mha.gov.in/).
3) ரயில்வேயில் 2,569 பேருக்கு வேலை-(https://www.rrbchennai.gov.in/).
4) மத்திய காவல்படையில் 25,487 பேருக்கு வேலை-(https://ssc.gov.in/).
5) SBI வங்கியில் 996 பேருக்கு வேலை-(https://sbi.bank.in/).
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.


