News April 28, 2025
BREAKING நெல்லையில் அதிக சொத்து சேர்த்த பொறியாளர் மீது வழக்கு

நெல்லை மாநகராட்சி உதவி பொறியாளர் லெனின். இவர் வருமானத்துக்கு அதிகமாக 3.59 கோடி சொத்து சேர்த்ததாக தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நெல்லை சாந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று (ஏப்.28) தீவிர சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அவர் மீதும் அவரது மனைவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்களை தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Similar News
News March 11, 2026
திருநெல்வேலி: மழை நேரங்களில் whatsapp-ல் உதவி!

திருநெல்வேலி மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் மின்தடை உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 11, 2026
தேர்தல் குறித்து போலீஸ் அதிகாரிகள் அவசர ஆலோசனை

நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையில் இன்று மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோப்புகளை முறையாக பராமரிக்கும் விதம் குறித்தும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் காவல் அதிகாரிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.
News March 11, 2026
திருநெல்வேலி: அரசின் கோர முகத்தை வெளிப்படுத்தியது – MLA

நெல்லை எம் எல் ஏ நைனார் நாகேந்திரன் செய்தி குறிப்பில், மதிய உணவின் தரத்தைக் கூட உறுதி செய்ய இயலாத போலி சமூகநீதி மாடல் அரசு இது. கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி பள்ளியில், பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட 44 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது போலி சமூக நீதி மாடல் அரசின் கோர முகத்தை மீண்டுமொரு முறை வெளிப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.


