News April 28, 2025
BREAKING நெல்லையில் அதிக சொத்து சேர்த்த பொறியாளர் மீது வழக்கு

நெல்லை மாநகராட்சி உதவி பொறியாளர் லெனின். இவர் வருமானத்துக்கு அதிகமாக 3.59 கோடி சொத்து சேர்த்ததாக தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நெல்லை சாந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று (ஏப்.28) தீவிர சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அவர் மீதும் அவரது மனைவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்களை தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Similar News
News September 18, 2025
நெல்லை: மனைவியை கத்தியால் குத்திய கணவர்

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே சவளைக்காரன்குளத்தை சேர்ந்த தவசிக்கனி, மனைவி அன்னசெல்வத்துடன் சென்னையில் வசித்து வந்தார். கோயில் திருவிழாவிற்காக சொந்த ஊர் வந்தபோது, மது அருந்த பணம் கேட்டு அன்ன செல்வம் மறுத்ததால் ஆத்திரமடைந்த தவசிக்கனி, அவரை கத்தியால் குத்தினார். படுகாயமடைந்த அன்ன செல்வம் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுக்குறித்து களக்காடு போலீசார் விசாரணை.
News September 18, 2025
தென் மாவட்ட சிறப்பு ரயில்களுக்கு முன் பதிவு விறுவிறுப்பு

தீபாவளி பண்டிகை ஆயுத பூஜை விடுமுறை நாட்களில் ஏற்கனவே சென்னை – நெல்லை உள்ளிட்ட ரயில்களில் டிக்கெட் விற்று தீர்ந்தன. இதையடுத்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கபட்டன. இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. முன்பதிவு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். குறிப்பாக சென்னை – நெல்லை – நாகர்கோவில் ரயில்களில் டிக்கெட்டுகள் வேகமாக முன்பதிவு செய்யப்பட்டன மேலும் ஒரு ரயில் அறிவிக்க பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
News September 18, 2025
நெல்லை அருகே ரயில்வே கேட் இன்று மூடல்

நெல்லை அருகே கங்கைகொண்டான் புளியம்பட்டி ரயில்வே கேட் (கிராசிங் எண் 9) பகுதியில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக புளியம்பட்டி ரயில்வே கேட் இன்று 18ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும் எனவே இந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையை பயன்படுத்தி ரயில்வே அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.