News April 12, 2025
BREAKING தென்காசியில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் தென்காசி, குமரி,நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் இன்று மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. *உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்*
Similar News
News November 2, 2025
தென்காசி: ரேஷன் கார்டு வைத்திருபோர் கவனத்திற்கு!

தென்காசி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News November 2, 2025
தென்காசி: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தேதி அறிவிப்பு

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் வீடு வீடாக சென்று சரிபார்க்கும் பணி நவ. 4ம் தேதி முதல் டிச. 4 வரை நடைபெறும். வரைவு வாக்காளர் பட்டியல் டிச. 9ம் தேதி வெளியிடப்படும். 2026 பிப். 7ம் தேதி இறுதி வாக்களர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 2, 2025
தென்காசி: இளைஞர் தற்கொலையில் 2 பேர் கைது

தென்காசி பாறையடி தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (23). இவரும், 17 வயது மாணவியும் காதலித்து வந்த நிலையில் மாணவியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று முந்தினம் மாணவியின் உறவினர்கள் 2 பேர் சிவசுப்பிரமணியனின் வீட்டிற்கு சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சிவசுப்பிரமணியன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மாணவியின் உறவினர் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.


