News May 7, 2025
BREAKING: திருப்பூரில் இளம்பெண் கொலை

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே காலி இடத்தில் இளம்பெண் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இறந்த பெண் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 8, 2026
மடத்துக்குளத்தில் அடித்துக் கொலை: ஒருவர் கைது

மடத்துக்குளம் அருகே அரியநாச்சிபாளையத்தில் நார் தொழிற்சாலை உள்ளது. இங்கு அசாமைச் சேர்ந்த 18 பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 4ம் தேதி விடுமுறை காரணமாக தொழிலாளர்கள் மது அருந்தி உள்ளனர். அப்போது தகராறு ஏற்பட்டு பினயக் என்பரை பிஸ்திராம் தாக்கியுள்ளார். இதனையடுத்து அவரை கோவை GH-ல் சிகிச்சைக்கு அனுமதி அளித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார், பிஸ்திராமை கைது செய்தனர்.
News January 8, 2026
திருப்பூர்: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை

திருப்பூர் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் <
News January 8, 2026
திருப்பூரில் மின்சாரம் தாக்கி பெண் பலி

திருப்பூர், வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கலாமணி (55). இவர் வீட்டில் இருந்தபோது ஹீட்டர் மூலமாக வெந்நீரை சுட வைத்ததாக தெரிகிறது. அப்போது சுவிட்சை ஆப் செய்ய முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் கலாமணி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


