News May 16, 2024
BREAKING திருச்செங்கோட்டில் ஐடி ரெய்டு

நாமக்கல் மாவட்டம் இளையம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் விவேகானந்தா மருத்து கல்லூரி, பொறியியல் கல்லூரிகளை உள்ளடக்கிய கல்வி நிறுவனத்தில் வருமான வரிசோதனை நடைபெற்று வருகிறது. சேலம் , கோவையை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கல்லூரி வளாகத்தில் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News December 2, 2025
நாமக்கல்: முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.10 சரிவு!

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.122-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.10 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.112-ஆக குறைந்து உள்ளது. முட்டை விலை உயர்வை தொடர்ந்து, முட்டை கோழி விலையும் உயர்வடைந்து வந்த நிலையில், தற்போது விலை சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 2, 2025
நாமக்கல்: SSC-ல் 25,487 காலிப்பணியிடங்கள்! APPLY NOW

நாமக்கல் மக்களே, பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 25,487 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th Pass
3. கடைசி தேதி : 31.12.2025,
4. சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 2, 2025
‘பசுமை சாம்பியன்’ விருதுபெற விண்ணப்பிக்கலாம்!

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செயல்பட்டோருக்கு ‘பசுமை சாம்பியன்’ விருது வழங்கப்படுவதால், தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா். ‘பசுமை சாம்பியன்’ விருதுக்கான முன்மொழிவை மாவட்ட ஆட்சியரிடம் 2026 ஜன. 20-க்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


