News April 1, 2025

BREAKING: தமிழகத்தின் அடுத்த தலைநகர் திருச்சி?

image

தமிழக சட்டசபை கூட்டத்தில் இன்று எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசுகையில், “திருச்சியை தமிழகத்தின் தலைநகராக அறிவிக்க வேண்டும்” என்ற கோரிகையை முன்வைத்து பேசினார். இதற்கு சபாநாயகர் அப்பாவு, “இதுகுறித்து பரிசீலிக்கப்படும்” என்று தெரிவித்தார். திருச்சி தலைநகர் ஆகவேண்டுமா? உங்களது கருத்துக்களை COMMENTல் சொல்லுங்க, SHARE பண்ணுங்க..

Similar News

News April 4, 2025

திருச்சி மாவட்ட இளைஞர்கள் கவனத்திற்கு…

image

தமிழக காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் மொத்தம் 1,299 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு வரும் ஏப்.7-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>tnusrb.tn.gov.in<<>> என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று மே.3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE NOW

News April 4, 2025

திருச்சி: கோவில் குளத்தில் கற்சிலை கண்டெடுப்பு

image

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கு சொந்தமான ராமா் தீா்த்தக் குளத்தில் தற்போது புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் குளத்தின் முள்புதரில் கற்சிலை ஒன்றின் தலைப்பகுதி மட்டும் நேற்று கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலை குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்!

News April 3, 2025

திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

image

திருச்சி மாவட்டம், தொட்டியம் மதுர காளியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு மாலை நேரங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் கனரக வாகனங்கள் மணமேட்டில் இருந்து பவித்திரம் செல்லும் சாலை வழியாக சென்று தோளூர்பட்டி இனைப்பு சாலை வழியாக நாமக்கல் புறவழி சாலையை அடையலாம் என காவல்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!

error: Content is protected !!