News January 24, 2025
BREAKING சேலம்: கடத்தப்பட்ட இளம் பெண் மீட்பு

சேலம் மாவட்டம் எடப்பாடியில் வீட்டுக்குள் புகுந்து நேற்று (ஜன.23) கடத்தப்பட்ட இளம்பெண் மீட்கப்பட்டார். பென்னாகரத்தைச் சேர்ந்த ரோஷினி காதல் திருமணம் செய்தது பிடிக்காமல், பெற்றோர் கடத்தியதாக புகார்; கணவர் வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட ரோஷினியை மீட்ட எடப்பாடி போலீசார் அவரது பெற்றோர், அக்கா, மாமாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News September 16, 2025
சேலம்: தமிழ் தெரியுமா? ரூ.71,000 சம்பளம்!

சேலம் மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 16, 2025
சேலத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று (செப்.16) கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சேலம் மாநகரத்தில் உள்ள பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. வரும் நாட்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News September 16, 2025
தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

ஆயுதப்பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (செப்.16) சேலம் வழியாக சென்னை சென்ட்ரல்-செங்கோட்டை-சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில்களை (06121/06122) சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் வரும் செப்.24 முதல் அக்.23 வரை இயக்கப்படுகின்றன. சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.