News August 8, 2024
BREAKING சேலத்தில் கனமழை!

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 11ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. எனவே, மாவட்ட மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
Similar News
News December 8, 2025
சேலம் வீட்டு வரி செலுத்துவது இனி ஈஸி!

சேலம் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அலுவலக நேரங்களில் அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!
News December 8, 2025
தலைவாசலில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்!

சேலம் மாவட்டம், தலைவாசல் புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற மின் ஊழியர் கிருஷ்ணன்.இவர் தனது முதல் மனைவியான பெரியம்மாள் கீழே விழுந்து இறந்துவிட்டார் என உறவினர்களிடம் நாடகமாடியுள்ளார். போலீசாரின் தீவிர விசாரணையில், கிருஷ்ணன் தனது மனைவியைத் தானே அடித்துக் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.இதையடுத்து, தலைவாசல் போலீசார் கிருஷ்ணனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News December 8, 2025
சேலம் GH-ல் பணம் கேட்டு தொல்லையா? இதை பண்ணுங்க!

சேலம் GH-ல் சிகிச்சைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இருப்பினும் அங்கு பணியாற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள்,காவலர்கள், ஓட்டுநர்கள் என பலரும் நோயாளிகளிடம் பணம் கேட்டு தொல்லை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதே போல் உங்களிடம் யாரேனும் பணம் கேட்டால் உடனடியாக 72001-18256 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம், அல்லது 72001 18256 என்ற எண்ணுக்கு WhatsApp பண்ணுங்க.இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க!


