News April 25, 2025
BREAKING: கோவையில் 3 மாணவர்கள் உயிரிழப்பு

பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணை பகுதிக்கு சுற்றுலா சென்ற சென்னை பூந்தமல்லி சவிதா பிசியோதெரபி கல்லூரியை சேர்ந்த பிசியோதெரபி மாணவர்கள் தருண், ராவத், ஆண்டோஜெனிப் ஆகியோர் ஆழியார் ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்த மாணவர்களின் உடலை மீட்கும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து ஆழியார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 26, 2025
கோவை மக்களுக்கு முக்கிய எண்கள்

▶️கோவை கலெக்டர்- 0422-2301114. ▶️மாநகராட்சி ஆணையர்- 0422-2390261. ▶️காவல் ஆணையர்- 0422-2300250. ▶️மாவட்ட காவல் கண்காணிப்பாளர்- 0422-2300600. ▶️துணை ஆணையர்- 9445074575. ▶️கலெக்டரின் நேர்முக உதவியாளர்- 0422-2301119. கோவை மக்களே இது போன்ற முக்கிய எண்களை SHARE பண்ணுங்க.
News April 26, 2025
இன்று உங்கள் ராகு, கேது தோஷத்தை நீக்கலாம்

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், நவகிரகங்களில் கேது பரிகார தலமாக விளங்குகிறது. இந்தக் கோயிலில், இன்று (ஏப்.26) மாலை 4:28 மணிக்கு கும்ப ராசிக்கு ராகுவும் சிம்ம ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இங்கு சென்று எமகண்ட நேரத்தில் கொள்ளு தானியத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்ப தோஷம் கேது தோஷம் நிவர்த்தி பெறலாம். SHARE பண்ணுங்க.
News April 26, 2025
ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை

கோவை ரயில் நிலையத்தின் வழியாக தினமும் 50க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் நேற்று டெல்லியில் இருந்து வந்த ரயிலில் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர். மேலும் அந்த ரயிலில் பயணம் மேற்கொண்ட பயணிகளின் உடைமைகளையும் சோதனை செய்தனர்.