News August 8, 2024
BREAKING கோவையில் கனமழை!

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 11ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. எனவே, மாவட்ட மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
Similar News
News September 13, 2025
கோவையில் தேசிய மக்கள் நீதிமன்றம்!

கோவை மாவட்ட நீதிமன்றத் துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று (செப். 13) துவங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். நிகழ்வு, நாளை சனிக்கிழமை காலை 9.30 மணியளவில், கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா இந்த நிகழ்வை துவங்கி வைக்க உள்ளார்.
News September 12, 2025
கோவை : இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (12.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 12, 2025
கோவை தங்க கொள்ளை வழக்கில் மேலும் இருவர் கைது!

கோவை அருகே ரூ.1.25 கோடி தங்கம் கொள்ளை வழக்கில் போலீசார் மேலும் இருவரை வாளையார் சோதனைச் சாவடியில் கைது செய்தனர். பாலக்காட்டை சேர்ந்த சதாம் உசேன், கொல்லத்தை சேர்ந்த ரோஷன் என்போர் தங்கம் கொள்ளையில் தொடர்புடையவர்கள் என உறுதி செய்யப்பட்டது. மேலும், இதுவரை கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 8 என போலீசார் தெரிவித்துள்ளனர்.