News April 29, 2025
BREAKING: குடிநீர் தொட்டியில் மனித மலம்!

தி.மலை மாவட்டம் பாணம்பட்டு கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலத்தை பூசிய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை தண்ணீர் பிடிக்க வந்த கிராம மக்கள் குடிநீர் தொட்டியில் மலம் பூசப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த போலீசார் மலத்தை பூசியது யார் என தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம் அரங்கேறியுள்ளது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 6, 2025
தி.மலை: இரவு ரோந்து காவலர்கள் விவரங்கள்

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (நவ.6) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
News November 6, 2025
தி.மலை: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

திருவண்ணாமலை மக்களே, மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 6, 2025
தி.மலை: மின் கம்பம் சேதமா..? உடனே புகார்!

தமிழக மின்வாரியத்தின் கீழ் பழுதடைந்த மின்கம்பங்களை உடனே புகார் அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் ஹெல்ப் லைன் எண் 1912-க்கு கால் செய்யலாம். மேலும், “TNEB Smart Consumer App” மூலம் ‘Complaint’ ஆப்ஷனில் புகார் பதிவு செய்யலாம். அதோடு www.tangedco.org தளத்தில் Consumer Complaints-ல் புகார் அளிக்கலாம். மேலும் சேதமடைந்த மின்கம்பங்கள் குறித்த புகாருக்கு 9443111912 என்ற எண்ணை வாட்ஸ் ஆப் மூலம் அழைக்கலாம்.


