News March 26, 2024
Breaking:மயிலாடுதுறை காங்.வேட்பாளர் அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 405 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.மற்றொரு பக்கம் கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.மயிலாடுதுறை தொகுதிக்கு சற்றுமுன் காங்கிரஸ் தரப்பில் இருந்து சுதா ராமகிருஷ்ணன் வேட்பாளராக அறிவித்துள்ளனர்.
Similar News
News February 19, 2026
மயிலாடுதுறை: நூதன முறையில் மோசடி; காவல்துறை எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களிக்க் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக தங்களுக்கு தெரிந்த நபர்களைப் போல் வீடியோ சித்தரித்து வீடியோ கால் மூலம் பணம் கேட்டால் பொதுமக்கள் அதை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் பொருட்டு மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News February 19, 2026
மயிலாடுதுறை: இன்று மின்தடை அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் எடமணல் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று(பிப்.19) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வைத்தீஸ்வரன் கோயில் சீர்காழி நகர், புங்கனூர் சட்டநாதபுரம், ஆத்துக்குடி, கதிராமங்கலம், திருப்புன்கூர், பணமங்கலம், திருமுல்லைவாசல், வேட்டங்குடி, தொடுவாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்தடை செய்யப்பட உள்ளது. SHARE IT
News February 19, 2026
மயிலாடுதுறையில் போலீசார் இரவு ரோந்து பணி விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (பிப்.18) இரவு 10 மணி முதல் இன்று (பிப். 19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


