News August 18, 2025
BREAKING:திண்டுக்கல் அமைச்சர் வழக்கில் திருப்பம்

அமைச்சர் ஐ. பெரியசாமி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் 2006-2010 வரையிலான காலகட்டத்தில் அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில், இன்று(ஆக.18) உச்சநீதிமன்றம் அதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 18, 2025
திண்டுக்கல்: LIC நிறுவனத்தில் வேலை வேண்டுமா..?

திண்டுக்கல் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 18, 2025
திண்டுக்கல்: டிகிரி முடித்தால் வங்கியில் சூப்பர் வேலை!

அரசு பொதுத்துறை வங்கியான மகாரஷ்ட்ரா வங்கியில் பொது அதிகாரி(Generalist officer) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் வருகிற ஆக.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதர்கு ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News August 18, 2025
அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு இன்று விசாரணை

தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமி கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் 2006-2010 வரையிலான காலகட்டத்தில் வருவாய், சட்டம், சிறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ. 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் அளவுக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக அவர், அவரது மனைவி, மகன் ஆகியோர் மீது போடப்பட்ட வழக்கு விசாரணை இன்று(ஆக.18) உச்ச நிதிமன்றத்தில் நடைபெறுகிறது.