News November 20, 2025
BREAKING:சேலம் கமிஷனர் அலுவலகம் முன் தீக்குளிப்பு!

சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் முன்பு இன்று காலை வாலிபர் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் காயமடைந்த வாலிபர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தற்கொலைக்கு முயன்ற அந்த வாலிபர் யார்? எதற்காக காவல் ஆணையாளர் அலுவலகத்தின் முன் தற்கொலைக்கு முயன்றார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 21, 2025
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (நவ.21) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News November 21, 2025
சேலம் விமான பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

சேலம் மாவட்டம், காமலாபுரத்தில் உள்ள சேலம் விமான நிலையத்தில் இருந்து இன்று (நவ.21) பெங்களூரு, கொச்சின் ஆகிய நகரங்களுக்கும், மேற்கண்ட நகரங்களில் இருந்து சேலத்திற்கும் இயக்கப்படவிருந்த அனைத்து விமான சேவைகளையும் ரத்துச் செய்வதாக அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் விமான நிலைய நிர்வாகம், தனது எக்ஸ் தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளது.
News November 21, 2025
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகராட்சியில் இன்று (21.11.2025)இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.


