News July 15, 2024
நெல்லையில் 416 பள்ளிகளில் காலை உணவு திட்டம்

நெல்லை மாவட்டத்தில் 416 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பாளை தொகுதிக்கு உட்பட்ட நடுவக்குறிச்சியில் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்க விழா இன்று நடைபெற்றது. நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி, பாளை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்ராஜ், நடுவக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
Similar News
News July 10, 2025
சிறுவன் மரணத்தில் பொய்யான தகவல் பரப்பினால் நடவடிக்கை

வடக்கன்குளம் பள்ளி விடுதியில் 7-ம் வகுப்பு மாணவன் சேர்மதுரை 8ம் தேதி கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். பணகுடி போலீசார் விசாரணையில், நீரில் மூழ்கியதால் பலி என உறுதியானது. பெற்றோர் புகாரின் பேரில் விடுதி காப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் பணப் பேரம் குறித்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என காவல்துறை மறுத்து, அவதூறு பரப்புவோர் மீது எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
News July 10, 2025
கூடங்குளம் அருகே மினி வேன் கவிழ்ந்து 20 பேர் காயம்

நெல்லை, கூடங்குளம் அருகே காமநேரியிலிருந்து கொத்தங்குளம் சென்ற மினி வேன், மாடு சாலையில் புகுந்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. விபத்தில் 20 பயணிகள் காயமடைந்தனர். உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். இந்த விபத்து காரணமாக போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து கூடங்குளம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News July 10, 2025
படகில் தவெக விளம்பரம்; கூட்டப்புளி விவகாரத்தில் திடீர் திருப்பம்

நெல்லை கூட்டப்புளியில் தமிழக வெற்றிக் கழக கட்சி பெயர் இருந்த நாட்டுப் படகுகளின் உரிமையாளர்களுக்கு மானிய மண்ணெண்ணெய் வழங்க அதிகாரிகள் மறுத்ததாக கூறப்படுகிறது. தவெக பெயரை நீக்கினால் தான் மண்ணெண்ணை வழங்கப்படும் என கூறியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்ட நிலையில் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து மண்ணெண்ணெய் வழங்கியதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது.