News March 19, 2025
பிரேசில் பாஸ்கட்பால் ஜாம்பவான் காலமானார்

பிரேசில் நாட்டின் பாஸ்கட்பால் ஜாம்பவான்களில் ஒருவரான லாமிர் மார்கிஸ் (87) காலமானார். 1959, 1963ஆம் ஆண்டுகளில் உலகக்கோப்பை பாஸ்கட்பால் சாம்பியன் பட்டத்தை பிரேசில் அணி வென்றபோது, அந்த அணிகளில் மார்கிஸ் இடம்பெற்றிருந்தார். மேலும், 1960, 1964ஆம் ஆண்டுகளில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பிரேசில் நாடு வெண்கலம் வென்றபோதும் அந்த அணிகளில் அவர் இருந்தார்.
Similar News
News July 7, 2025
பொதுத்துறை வங்கிகளில் 50,000 வேலை வாய்ப்புகள்!

2025-26 நிதியாண்டில், 12 பொதுத்துறை வங்கிகளில் சுமார் 50,000 பேருக்கு வேலை வழங்கப்படவுள்ளது. இதில், 21,000 பேர் அதிகாரிகளாகவும், மீதமுள்ளவர்களுக்கு எழுத்தர் & பிற ஊழியர்களாகவும் நியமிக்கப்படுவார்கள். <<16845265>>SBI <<>>மட்டும் 20,000 பேரை வேலைக்கு அமர்த்தவுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல, PNB வங்கியில் 5,500 பேரையும் வேலையில் அமர்த்த இருப்பதாக கூறப்படுகிறது.
News July 7, 2025
தோனியின் முதல் காதலியின் பெயர் இதுதான்!

2018-ல் நடந்த ஒரு விளம்பர நிகழ்ச்சியில் மேஜிக் மேன் ஒருவர், தோனியின் முதல் காதலியின் பெயரை யூகிக்க முயற்சித்தார். இறுதியில், ‘அவள் பெயர் ஸ்வேதா’ எனக் கூறிய MSD, ஆனால் என் மனைவியிடம் சொல்லிவிடாதீர்கள் என்று அவர் கூற அங்கு சிரிப்பலை எழுந்தது. கூல் கேப்டனாக அறியப்படும் தோனி, இன்று தனது 44-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். எனவே, அவரது விளையாட்டு & தனிப்பட்ட வாழ்க்கையை பலரும் நினைவுகூருகின்றனர்.
News July 7, 2025
மத்திய அரசை கண்டித்து நாளை மறுநாள் ஸ்டிரைக்!

மத்திய அரசை கண்டித்து நாளை(ஜூலை 9) மறுநாள் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொமுச, சிஐடியு, ஐஎன்டியுசி உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளன. 4 புதிய தொழிலாளர் சட்டங்களைத் திரும்பப் பெறுதல், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினம், பஸ், ஆட்டோக்கள் ஓடாது என தொமுச எச்சரிக்கை விடுத்துள்ளது.