News May 18, 2024
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் பிரேசில்

2027இல் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற உள்ளது. சர்வதேச கால்பந்து சங்கத்தின் (பிபா) சிறப்பு கூட்டம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்தது. இதில் 2027ஆம் ஆண்டுக்கான 10ஆவது பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாடு எது என்பது வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்யப்பட்டது. இதில், பிரேசில் 119-78 என்ற கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை நடத்துவதற்கான அனுமதியை பெற்றது.
Similar News
News February 17, 2026
நம்பிக்கை நாயகன் SK-வுக்கு பிறந்தநாள்

சாதாரண மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக தொடங்கி தமிழ் சினிமாவின் உச்சம் தொட்ட நாயகன். கனவும் அதற்கான உழைப்பும் இருந்ததால் இங்கு எதுவும் சாத்தியம் என சாமனியனுக்கு உணர்த்திய நாயகன். கேலி கிண்டலுக்கு வெற்றி புன்னகையால் பதில் அளித்து வரும் நம்பிக்கை நட்சத்திரம். போஸ் பாண்டி, மேஜர் முகுந்த், செழியன் என பெயர் சொல்லும் கதாபாத்திரங்களால் மக்களின் மனங்களை வென்ற சிவகார்த்தியேகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
News February 17, 2026
தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்

2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்ய உள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளதால், மக்களைக் கவரும் பல முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளது. பின்னர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில், சட்டமன்ற கூட்டத்தொடர் எத்தனை நாள்கள் நடத்த வேண்டும் என முடிவு செய்யப்படும்.
News February 17, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 17, மாசி 5 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்:10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்:3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: அமாவாசை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.


