News August 11, 2024
Brazil: 62 பேரின் உடல்கள் மீட்பு

பிரேசிலில் விமான விபத்தில் உயிரிழந்த 62 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடையாளத்தை உறுதி செய்வதற்காக 34 ஆண்கள் மற்றும் 28 பெண்கள் என அனைவரின் உடல்களும், பிணவறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. Voepass நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 58 பயணிகள், 4 விமான ஊழியர்களுடன் சாவ் பாலோ நகரத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, தரையில் விழுந்து நொறுங்கியதில் அனைவரும் உயிரிழந்தனர்.
Similar News
News November 24, 2025
பன்னாட்டு தலைவர்களுடன் PM மோடி சந்திப்பு

ஜி20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக கனடா, ஜப்பான், இத்தாலி நாடுகளின் PM-கள், பிரேசில், தெ.ஆப்பிரிக்காவின் அதிபர்கள் ஆகியோருடன் PM மோடி தனித்தனி சந்திப்பை நடத்தினார். அப்போது, உலக அமைதி, தீவிரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு, டிஜிட்டல் மேம்பாடு, காலநிலை மாற்றம், எல்லை பாதுகாப்பு, யுரேனியம் விநியோகம் உள்ளிட்ட பல ஒத்துழைப்புகள் குறித்து மோடி ஆலோசித்துள்ளார்.
News November 24, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News November 24, 2025
தெருநாய்கள் பற்றி பயத்தை ஏற்படுத்துகின்றனர்: நிவேதா

தெருநாய்கள் குறித்து மக்களிடையே தேவையில்லாத பயத்தை ஏற்படுத்தி வருவதாக நிவேதா பெத்துராஜ் கூறியுள்ளார். தெரு நாய்களை அகற்றுவதுதான் ஒரே தீர்வு என்பது இல்லை. நாய்கள் இல்லையென்றால், குரங்குகள் வரும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், தெருநாய்களுக்கு போதுமான செல்டர் இல்லை என்பதால், அவைகளுக்கு தடுப்பூசி போடுவது தான் ஒரே தீர்வு என்றும் நிவேதா பரிந்துரைத்துள்ளார். உங்கள் கருத்து என்ன?


