News May 2, 2024
பிரஜ்வாலின் முன்னாள் டிரைவர் திடீர் மாயம்

பாலியல் புகாரில் சிக்கிய எம்.பி பிரஜ்வாலின் வீடியோக்களை வெளியிட்டதாகக் கருதப்படும் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் திடீரென மாயமாகி உள்ளார். 13 ஆண்டுகள் பிரஜ்வாலிடம் டிரைவராகப் பணியாற்றிய அவருக்கும், பிரஜ்வாலுக்கும் நில விவகாரத்தில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. சிறப்புப் புலனாய்வுக்குழு முன் ஆஜராக உத்தரவிட்ட நிலையில் கார்த்திக் மாயமாகி உள்ளார். இது கர்நாடக அரசியலில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
Similar News
News January 29, 2026
அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய அறிவிப்பு

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பணிகள் தீவிரமாகியுள்ள நிலையில், முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பார்வைச் சவால் கொண்ட மாணவர்களுக்கான எழுத்தர் (Scriber) பணிக்கு B.Ed., தொழிற்கல்வி, பட்டப்படிப்பு பயிலும் 2-ம் ஆண்டு மாணவர்கள், ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தின் தன்னார்வலர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
News January 29, 2026
விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா..!

தவெக கொள்கைத் தலைவர்களில் ஒருவரான <<18980620>>காமராஜர்<<>> போட்டியிட்ட விருதுநகர், நாகர்கோவில் ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் களமிறங்க விஜய் முதலில் திட்டமிட்டிருந்தார். தற்போது, அவர் வேளச்சேரி தொகுதியை டிக் செய்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. பனையூர் இல்லத்திற்கு அருகே வேளச்சேரி இருப்பதால், தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க வசதியாக இருக்குமாம். மேலும், V சென்டிமெண்ட்டையும் அவர் மனதில் வைத்துள்ளார். WORKOUT ஆகுமா?
News January 29, 2026
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சசி தரூர்

காங்., MP சசி தரூர், சமீபகாலமாக PM மோடியின் செயல்பாடுகளை தொடர்ந்து பாராட்டி வந்தார். இதனால், அவர் சொந்த கட்சிக்குள்ளேயே ஓரங்கட்டப்படுவதாகவும், பாஜகவில் இணையவுள்ளதாகவும் பேச்சு அடிப்பட்டது. இந்நிலையில், கார்கே, ராகுலை சந்தித்த போட்டோவை வெளியிட்ட சசி தரூர், ‘ஒருமித்த கருத்துடன் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய தொடர்ந்து முன்னோக்கிச் செல்வோம்’ என பதிவிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


