News May 27, 2024

பிரஜ்வால் ரேவண்ணா விசாரணைக்கு ஆஜராகிறார்

image

பாலியல் புகாரில் சிக்கிய கர்நாடக எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா வரும் 31ஆம் தேதி சிறப்பு விசாரணைக் குழு முன் ஆஜராவதாக முதல்முறையாக வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தன் மீதான குற்றச்சாட்டு பொய்யானவை என்று கூறிய அவர், தன் குடும்பத்தினர், கர்நாடக மக்கள், ஜேடிஎஸ் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார். தலைமறைவாக உள்ள அவர், உடனே நாடு திரும்ப தேவகவுடா எச்சரித்திருந்தார்.

Similar News

News March 10, 2026

அதோட உங்க அரசியல் முடிஞ்சிடும்: அமீர்

image

விஜய்யின் அரசியல் வருகையை அடுத்து அவரை <<19318052>>அமீர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.<<>> இந்நிலையில் கரூர் வழக்கு தொடர்பாக விசாரணைக்காக டெல்லிக்கு வருமாறு CBI சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில், ‘CBI விசாரணைக்கு பயந்து NDA கூட்டணிக்கு போயிராதீங்க; அதோட உங்க அரசியல் முடிஞ்சிடும்’ என விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் வெளியான அமீரின் பதிவு SM-ல் கவனம் பெற்றுள்ளது.

News March 10, 2026

ஒளவையார் பொன்மொழிகள்

image

*ஒருவனிடத்திலே காணப்படும் நல்ல முயற்சிகளுக்கெல்லாம் அப்போது பயன் இல்லையாயினும் பின்னே பலன் உண்டாகும். *காரியங்களைப் பிறர் குறிப்பறிந்து செய்பவரே அறிவுடையவர். *சோம்பலே தீமைக்கும் துன்பத்திற்கும் பிறப்பிடம். *அடக்கமுள்ளவரின் வலிமையை அறியாது அவரை வெல்ல நினைப்பவனுக்குத் தப்பாது கேடு நேரும். *உங்கள் நண்பர்களிடமும் உங்கள் ஏழ்மை நிலையைப் பற்றிப் பேசாதீர்கள்.

News March 10, 2026

ஒரு தொலைபேசியில் PM மோடி போரை நிறுத்தி விடுவார்: UAE

image

வளைகுடா நாடுகளின் மீதான ஈரானின் தாக்குதல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என இந்தியாவுக்கான UAE தூதர் ஹுசைன் ஹர்சன் மிர்சா தெரிவித்துள்ளார். பத்து நாட்களுக்கு முன்பு PM மோடி இஸ்ரேலில் இருந்தார்; ஈரானின் எண்ணெயை அதிகம் வாங்கும் அவர் மிக நல்ல உறவைக் கொண்டுள்ளார் என்றார். இஸ்ரேல் – ஈரான் இடையேயான பிரச்சனையை, ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் PM மோடி தீர்த்து வைத்துவிடுவார் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!