News September 2, 2025
மூளையைத் தின்னும் அமீபா: அரசு முக்கிய உத்தரவு

கேரளாவில் ஆகஸ்டில் மட்டும் மூளையைத் தின்னும் அமீபா பரவலால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னை, அதன் அண்டை மாவட்டங்கள் மற்றும் மேற்குதொடர்ச்சிமலை அடிவார மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அத்துடன் நன்னீரில் உள்ள அமீபா பரவலால் இத்தொற்று ஏற்படும் என்பதால், மாநகராட்சி, நகராட்சி மற்றும் நட்சத்திர ஓட்டலில் உள்ள குளங்களை ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News September 2, 2025
தங்கம் விலை ஒரே வாரத்தில் ₹3,360 உயர்வு

ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை, இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து புதிய Record-ஐ படைத்துள்ளது. கடந்த 8 நாள்களில் ஒருநாள் கூட தங்கம் விலை குறையவில்லை. கடந்த 25-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ₹74,440-க்கு விற்பனையான நிலையில், இதுவரை சுமார் ₹3,360 வரை உயர்ந்து, இன்று 77,800-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் கடந்த 5 நாள்களில் கிலோவுக்கு ₹7 ஆயிரம் அதிகரித்துள்ளது.
News September 2, 2025
தமிழகத்தில் தொடங்கியது தேர்தல் ஃபீவர்

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் ஜுரம் தொடங்கிவிட்டது. இதற்காக முதற்கட்டமாக, பெரம்பலூருக்கு 180 மின்னணு வாக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இயந்திரங்களை பெரம்பலூர் ஆட்சியர் மிருணாளினி ஆய்வுசெய்தார். இதன்பிறகு வாக்கு இயந்திரங்கள், கிடங்கில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அறைக்கு சீல் வைக்கப்பட்டது.
News September 2, 2025
BJP தலைவராக இருக்க இதுதான் தகுதியா? TRB ராஜா காட்டம்

CM ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் குறித்து <<17586070>>நயினார் நாகேந்திரன்<<>> கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், பொய் மட்டுமே பேசி, தமிழ்நாட்டையும் தமிழர்களையும் இழிவுபடுத்துவதுதான் பாஜக தலைவர் பதவியில் இருப்பதற்கான ஒரே தகுதியா என அமைச்சர் TRB ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக உள்ள தமிழகம் குறித்த உண்மைத் தரவுகளை அறிந்துகொள்ள ஓரளவாவது முயற்சி எடுங்கள் எனவும் கூறியுள்ளார்.