News March 17, 2024

 மூளை சாவடைந்தரின் உடல் உறுப்புகள் தானம்

image

நத்தக்காடையூர் அருகே பழைய கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார், விவசாயி. இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

Similar News

News October 24, 2025

திருப்பூர்: இரவு நேர ரோந்து காவலர்களின் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். மேலும் உடுமலைப்பேட்டை, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 100 அழைக்கவும்!

News October 23, 2025

எறிபந்து போட்டிக்கு தனியார் பள்ளி மாணவன் தேர்வு!

image

தேசிய அளவிலான எறிபந்து போட்டிக்கான வீரர்கள் தேர்வு பெருந்துறையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியின் மாணவன் பவின் கலந்து கொண்டு தேசிய அளவில் நடைபெறும் எறிபந்து போட்டிக்கு தேர்வாகியுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News October 23, 2025

திருப்பூர்: வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

image

திருப்பூர் மாவட்ட காவல் துறை சார்பில் வாராந்திர பொதுமக்களின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் இந்த குறைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

error: Content is protected !!