News August 19, 2024

ஸ்டாலினுக்கு ராக்கி கட்டிய பிரம்மகுமாரிகள்

image

சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் பண்டிகையையொட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பிரம்மகுமாரி சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். தலைமைச்செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கு சென்று, அவரது கையில் ராக்கி கயிற்றைக் கட்டி, அவர்கள் இனிப்புகளை வழங்கினர். அப்போது, முதல்வரும் நெகிழ்ச்சியுடன் சகோதரத்துவத்தின் அடையாளமாக ரக்சா பந்தன் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

Similar News

News April 3, 2026

இன்றைய நல்ல நேரம்

image

ஏப்ரல் 3, பங்குனி 20 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: பிரதமை ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்

News April 3, 2026

337 பணியிடங்கள்.. ITI தகுதி போதும்

image

இந்திய அணுசக்தி நிறுவனத்தில் 337 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெக்னீசியன், இன்ஜினியர் உள்ளிட்ட பணிகளுக்கு ITI / டிப்ளமோ / B.E / டிகிரி கல்வித்தகுதி அவசியமாகும். மாதந்தோறும் 10,560 முதல் 12,300 வரை ஸ்டைபண்டாக வழங்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கு ஏப்.6-ம் தேதிக்குள் இந்த <>லிங்க்கில்<<>> விண்ணப்பிக்கவும்.

News April 3, 2026

மூட்டு வலியை தீர்க்கும் மூக்கிரட்டை கீரை

image

இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகளை கொண்ட மூக்கிரட்டை கீரை, நீண்ட காலமாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த கீரையை சாப்பிட்டால் *உடல் சூடு குறையும் *செரிமானம் மேம்படும் *ரத்தம் சுத்திகரிக்கப்படும் *மூட்டு வலி குறையும் *சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் குணமாகும் *நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இதை மூல நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு தீர்வு பெறலாம்.

error: Content is protected !!