News June 18, 2024

விலங்குகளை பாதுகாக்க சிறுவனின் புதிய கண்டுபிடிப்பு

image

தண்டவாளங்களை கடக்கும் போது, ரயிலில் அடிபட்டு வனவிலங்குகள், கால்நடைகள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. இதற்கு தீர்வாக, தஞ்சாவூரைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவன் சாம் ஜபர்சன், புதிய தானியங்கி கருவியை உருவாக்கி அசத்தியுள்ளார். இந்த கருவி, அபாய ஒலி எழுப்பி விலங்குகளை விரட்டும் அல்லது தண்ணீரை பீய்ச்சி அடித்து அவற்றை அப்புறப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 14, 2025

காலையில் எழுந்தவுடன் செய்யக்கூடாத விஷயங்கள்

image

காலையில் எழுந்ததும் நாம் என்ன செய்கிறோம் என்ற விஷயம் தான் நமது நாளே எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கிறது. உதாரணத்துக்கு, காலையில் எழும்போதே பரபரப்பாக எழுந்தால், அன்றைய நாளே நிதானமாக போகாது, செய்யும் விஷயங்களை எல்லாம் பதற்றத்தோடே செய்வீர்கள். இதுபோல, காலையில் எழுந்ததும் செய்யவே கூடாத பல விஷயங்கள் இருக்கிறது. அது என்ன என்பதை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News September 14, 2025

இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும்: ப.சிதம்பரம்

image

இந்தியாவிலும் புரட்சி வெடிக்காமல் இருப்பதற்கு, நாம் இன்னும் ஜனநாயக நாடாக இருப்பதே காரணம் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கையில் நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், பசி, வேலையின்மை, வறுமை அதிகரித்துவிட்டால் இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும் என தெரிவித்துள்ளார். ஆனால், இது எப்போது வெடிக்கும், எங்கு வெடிக்கும், அப்போது யார் தலைமை தாங்குவார்கள் என்று தன்னால் கூற முடியாது என்றார்.

News September 14, 2025

மகளிர் உரிமைத் தொகை: CM ஸ்டாலின் கொடுத்த அப்டேட்

image

மகளிர் உரிமைத் தொகை குறித்து அதிகாரிகளுக்கு CM ஸ்டாலின் முக்கியமான உத்தரவு பிறப்பித்துள்ளார். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி தலைமை செயலகத்தில் CM ஆய்வு மேற்கொண்டார். அப்போது மகளிர் உரிமைத் தொகை தொடர்பான கள ஆய்வுகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் நற்செய்தி கிடைக்க போகிறது.

error: Content is protected !!