News October 1, 2025
காதலி வீட்டின் சுவர் ஏறி குதித்த காதலன் சாவு

ஒடிசாவில் காதலி அழைத்ததால் அவரது வீட்டிற்குச் சென்ற காதலன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காதலி வீட்டின் சுவர் ஏறி குதித்தபோது, காதலன் பிஸ்வாஜித் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனிடையே, பிஸ்வாஜித் இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக, காதலியின் குடும்பத்தினரிடம் போலீஸ் விசாரித்து வருகிறது. So sad.
Similar News
News October 2, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர்கள் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் 01.10.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவினாசி ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.
News October 2, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News October 2, 2025
ஒரே நாளில் 100 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு

இந்தியாவில் 2019-ம் ஆண்டுக்கு பிறகு மாரடைப்பு மரணங்கள் அதிகரித்துள்ளதாக NCRB அறிக்கையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக 2023-ல் ஒரு நாளில் 175 திடீர் மரணங்கள் ஏற்பட்டதாகவும், அதில் 100 உயிரிழப்புகள் மாரடைப்பால் நிகழ்ந்தவை என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 2023-ல் 35,637 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள நிலையில், TN-ல் 1,711 பேர் மாரடைப்பால் இறந்துள்ளனர். எனவே இதய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க..