News April 14, 2024
மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே 10 வயது சிறுவன் முத்துராமலிங்கம் வீட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை சிறுவன் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது. அப்போது தண்ணீர் பம்பில் இருந்து வந்த மின்சாரம் தாக்கியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News November 9, 2025
இந்தியாவின் டான்கள் 2 பேர் USA-வில் கைது!

இந்தியாவில் குற்றம் செய்துவிட்டு வெளிநாடுகளில் பதுங்குவது புதிதல்ல. ஆனால், அவர்களை கண்டுபிடித்து கைது செய்வது கடினம். அப்படி, இந்தியாவில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த 2 மிகப்பெரிய தாதாக்கள், USA-வில் கைது செய்யப்பட்டுள்ளனர். BSP தலைவர் கொலை வழக்கில் தொடர்புடைய வெங்கடேஷ் கார்க், பிரபல டான் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த பாணு ராணா ஆகியோரை இந்திய பாதுகாப்பு அமைப்பு அதிரடியாக கைது செய்துள்ளது.
News November 9, 2025
அடிக்கடி Scent அடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்க?

Scent அடிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால், தொடர்ந்து Scent பயன்படுத்துவது உடல் நலத்திற்கு கேடாக அமையலாம் என எச்சரிக்கப்படுகிறது. Scent-களில் Phthalate என்ற கெமிக்கல் சேர்க்கப்பட்டிருக்கும். அதை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது, Hormone செயல்பாட்டில் சீர்கேடு, ஆண்களுக்கு இனப்பெருக்க பிரச்னைகளை உண்டாக்குமாம். Scent வாங்கும் போது Phthalate Free என்று இருக்கிறதா என்பதை கவனியுங்கள். SHARE IT.
News November 9, 2025
தங்கம் குறைந்த விலையில் கிடைக்கும்

இந்தியா, துபாயை விட பூட்டானில் தங்கம் விலை குறைவு. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க திட்டமிட்ட அந்நாட்டு அரசு, அங்கு தங்கத்திற்கு வரி விலக்கு அளித்துள்ளது. அத்துடன், பொதுவாகவே அங்கு இறக்குமதி வரி குறைவு என்பதால் தங்கத்தின் விலை சற்று குறைவாகவே இருக்கிறது. இன்றைய நிலவரப்படி, துபாயில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ₹1,12,700 என்றால், நமது அண்டை நாடான பூட்டானில் ₹84,464 தான்.


