News October 27, 2025
இந்திய மண்ணை ஆட்சி செய்த பவுலர்கள்

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு உலகளவில் சிறப்பு வாய்ந்ததாக இருந்து வருகிறது. பல பந்துவீச்சாளர்கள் உலக கிரிக்கெட்டில் சாதனை படைத்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர். இதில், சிலர் நமது சொந்த மண்ணில், தங்களது அபாரமான ஆட்டத்தை வெளிபடுத்தி உள்ளனர். அவர்களில், அதிக விக்கெட் வீழ்த்திய டாப் 5 பவுலர்கள் யார் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். இதில், உங்களுக்கு படித்த பவுலர் யார்?
Similar News
News November 4, 2025
இப்படி பண்ணா உங்க போனும் வெடிக்கலாம்.. உஷாரா இருங்க!

ரோட்டில், ஆபீஸில் என பல நேரங்களில், திடீரென போன்கள் வெடித்து சிதறும் சம்பவங்கள் நடக்கின்றன. இதற்கு பல காரணிகள் இருந்தாலும், முக்கிய காரணமாக, போனைக் கூடுதல் நேரம் சார்ஜில் போட்டு வைப்பதுதான் என்று கூறப்படுகிறது. அதிக நேரம் சார்ஜாகும் போது, பேட்டரி அதிகமாக சூடாகி விடுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் போன் வெடிக்கும் அபாயம் உண்டு. எனவே, போன் சார்ஜில் இருந்தாலும், கவனத்துடன் இருங்கள். SHARE IT
News November 4, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 குறைந்தது

தங்கம் விலை 22 கேரட் கிராமுக்கு ₹100, சவரனுக்கு ₹800 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,250-க்கும், சவரன் ₹90,000-க்கும் விற்பனையாகிறது. நவம்பர் மாதம் தொடங்கியது முதலே ஏறுமுகத்தில் இருந்த தங்கம்<<18192239>> சர்வதேச சந்தையில்<<>> ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக மீண்டும் மளமளவென சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News November 4, 2025
தனித்தொகுதியில் தனி கவனம் செலுத்தும் திமுக!

தனித் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு இதர சாதியினர் ஓட்டுப்போடுவதில்லை என்ற பேச்சு உள்ளது. அதனால்தான், கடந்த தேர்தல்களில் கூட்டணி வலுவாக இருந்தும், தனித் தொகுதிகளில் திமுகவை விட அதிமுக அதிக எண்ணிக்கையில் வெற்றிபெற்றது. குறிப்பாக, பொன்னேரி, வாசுதேவநல்லூர், அவிநாசி உள்ளிட்ட பல தனித் தொகுதிகளில் நீண்டகாலமாக DMK போட்டியிடவில்லை. தற்போது தனித் தொகுதிகளில் கவனம் செலுத்த திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாம்.


