News August 5, 2025
இரு அவைகளுக்கு 2 மணிவரை ஒத்திவைப்பு

ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் முழக்கமிடும்போது அவையின் மையத்திற்கு CISF படையினர் வந்ததற்கு எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இதனால் ஆளும் தரப்புக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அவை 2மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் பிஹார் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் லோக்சபாவும் ஒத்தி வைக்கப்பட்டது.
Similar News
News August 5, 2025
தனி நபர் எவ்வளவு நகைக் கடன் வாங்கலாம்?

தங்கம், வெள்ளி நகைக் கடன் வாங்குபவர்களுக்கு ரிசர்வ் வங்கி வரம்பு நிர்ணயித்துள்ளது. அதன்படி, ஒருவர் 1 கிலோ வரை தங்க நகைகள், 50 கிராம் வரை தங்க நாணயங்களை அடமானம் வைக்கலாம். இதேபோல், 10 கிலோ வரை வெள்ளி நகைகள், அரை கிலோ வரை வெள்ளி நாணயங்களை அடகு வைக்க முடியும். கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். மேலும், தங்கத்திற்கு அதன் மதிப்பில் 85% வரை கடன் வாங்க முடியும். SHARE IT.
News August 5, 2025
அடுத்த கட்டத்துக்குச் செல்லும் அஜித் மரண வழக்கு!

அஜித்குமார் மரண வழக்கில் தொடர்புடைய 5 தனிப்படை போலீசாரை 2 நாள்கள் விசாரிக்க மதுரை மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 5 காவலர்களும் தற்போது மதுரை மத்திய சிறையில் உள்ளனர். மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையின்போது மரணமடைந்த வழக்கை சிபிஐ கொலை வழக்காக பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகிறது. காவலர்களை விசாரிக்கும்போது, முக்கிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News August 5, 2025
காஷ்மீர் முன்னாள் கவர்னர் சத்யபால் மாலிக் காலமானார்

Ex கவர்னர் சத்ய பால் மாலிக்(79) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். டெல்லி ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது. ஜம்மு – காஷ்மீர், ஒடிசா, பீகார், கோவா, மேகாலயா ஆகிய மாநிலங்களின் கவர்னராக அவர் பொறுப்பு வகித்துள்ளார். 2019-ல் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது, அங்கு அவரே கவர்னராக இருந்தார். 2 முறை பார்லிமெண்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் சத்ய பால் மாலிக்.