News December 2, 2024

இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

image

அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், வக்ஃப் வாரிய மசோதா குறித்து விவாதிக்கக் கோரி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அத்துடன், தமிழக வெள்ள பாதிப்பு குறித்து அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்கக் கோரி திமுக எம்.பிக்கள் முழக்கம் எழுப்பினர். தொடர் அமளியில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்ய சபாநாயகர் முயன்றும் தோல்வியடைந்ததால், இன்று நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

Similar News

News August 25, 2025

சற்றுமுன்: தங்கம் விலை குறைந்தது

image

கடந்த வார இறுதியில் கிடுகிடுவென்று அதிகரித்த ஆபரணத் தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான இன்று சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 குறைந்து ₹74,440-க்கும், கிராமுக்கு ₹10 குறைந்து ₹9,305-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹131-க்கும், கிலோ வெள்ளி ₹1000 உயர்ந்து ₹1,31,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News August 25, 2025

பனீரை விரும்பி சாப்பிடுகிறீர்களா..

image

தற்போது பல இந்தியாவில் 83% போலி பனீர்கள் விற்கப்படுவதாக Food Safety and Standards Authority of India எச்சரித்துள்ளது. இந்த போலி பனீர், மைதா, ArrowRoot powder, Urea போன்றவற்றை கலந்து தயாரிக்கப்படுகிறது. பனீரின் மீது Iodine Tincture-ஐ விடும் போது, அது கருப்பாக மாறினால், அது போலி. ஒரிஜினல் பனீரில், அது படிமனாக தங்கி விடும். குடல், கிட்னி போன்றவற்றுக்கு இந்த போலி பனீர் பிரச்னையை உண்டாக்குமாம்.

News August 25, 2025

திமுகவுடன் கூட்டணி இல்லை.. விஜய்யுடன் கூட்டணியா?

image

தூய்மைப் பணியாளர்கள் விவகாரம், கவின் ஆவணக் கொலை வழக்கு ஆகியவற்றில் திமுக அரசின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார், இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் செ.கு.தமிழரசன். விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவுடன் கூட்டணி கிடையாது என அறிவித்தார். CM ஸ்டாலினை ‘Uncle’ என விஜய் அழைத்ததில் தவறில்லை என்ற அவர், தவெக தரப்பில் கூட்டணிக்கு அழைத்தால் பரிசீலிப்போம் என்றார்.

error: Content is protected !!