News October 18, 2024

போஸ் வெங்கட் தாயார் காலமானார்

image

நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட்டின் தாயார் ராஜாமணி (83) காலமானார். வயது மூப்பு காரணமாக அவர் இயற்கை எய்தியதாக போஸ் வெங்கட் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராஜாமணியின் இறுதிச் சடங்கு நாளை மாலை அறந்தாங்கியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போஸ் வெங்கட் இயக்கிய சார் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

Similar News

News July 4, 2025

PF-ல் சேரும் ஊழியர்களுக்கு குட் நியூஸ்

image

புதிதாக வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேரும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என வைப்புநிதி ஆணையர் விஜய் ஆனந்த் அறிவித்துள்ளார். 6 மாதங்களுக்கு ஒருமுறை 2 தவணைகளாக அதிகபட்சம் ₹7,500 வீதம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார். மேலும் ஊழியரை சேர்க்கும் நிறுவனங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார். சூப்பர் பிளானா இருக்கே…

News July 4, 2025

நாய்க்கடியை அலட்சியம் செய்யாதீங்க: அரசு எச்சரிக்கை!

image

நாய்க்கடி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி செலுத்துவது முக்கியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியும் இருசிறார்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாய் கடித்த இடத்தை முறையாக கழுவாமல் இருப்பது, தாமதமாக சிகிச்சைக்கு வருவது, தடுப்பூசி கால அட்டவணையை மீறுவது ஆகியவை உயிருக்கே ஆபத்தாக மாறும் என தெரிவித்துள்ளது.

News July 4, 2025

கேப்டன் ஆசையில் உள்ளாரா ஜடேஜா?

image

கோலி, ரோகித், அஸ்வின் போன்ற வீரர்கள் ஓய்வுப் பெற்றுவிட்டனர். இருப்பினும் பும்ரா, கில் போன்ற வீரர்களையே கேப்டானாக பார்த்த தேர்வாளர்கள், ரவீந்திரா ஜடேஜாவை பார்க்க தவறிவிட்டனர். தற்போதுள்ள அணியில் மூத்த வீரர் என்றால் அது ஜடேஜா தான். கேப்டனாக வேண்டும் என ஆசை உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘அந்த கப்பல் கரையை கடந்துவிட்டது’, அதாவது அதற்கான நேரம் முடிந்துவிட்டது என நாசூக்காக சொன்னார் ஜடேஜா.

error: Content is protected !!