News March 28, 2024
அரையிறுதிக்கு முன்னேறிய போபண்ணா ஜோடி

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் போபண்ணா, ஆஸி.,யின் மேத்யூ எப்டன் ஜோடி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தின் செம் வெர்பீக், ஆஸி.,யின் பேட்ரிக் சுமித் ஜோடியை எதிர்கொண்ட போபண்ணா ஜோடி 6-3, 6-7(4), 7-10 என்ற செட் கணக்கில் வென்றது. இதையடுத்து அரையிறுதிச் சுற்றில் ஸ்பெயினின் கிரானோல்லர்ஸ், அர்ஜெண்டினாவின் ஹொராசியோ ஜோடியை போபண்ணா ஜோடி எதிர்கொள்கிறது.
Similar News
News February 5, 2026
மூட்டு வலியை விரட்டும் கசாயம்!

கை, கால், கழுத்து & மூட்டு வலி நீங்க சித்தரத்தை கசாயம் பருகும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனை செய்ய, சித்தரத்தை சூரணம்- அரை தேக்கரண்டி, சீந்தில் கொடி சூரணம்- அரை தேக்கரண்டி, சுக்கு பொடி- அரை தேக்கரண்டி தேவை. இவை மூன்றையும் 200மிலி நீரில் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து, வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம். இந்த பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.
News February 5, 2026
ரேஷன் கார்டு தொலைந்து விட்டதா.. ஆன்லைனில் பெற

தமிழக அரசின் <
News February 5, 2026
கடத்தல் வழக்கில் நடிகர் மோகன் பாபு அதிரடி கைது

2 மாணவர்களை கடத்தி தாக்கிய வழக்கில் நடிகர் மோகன் பாபு கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் MB யுனிவர்சிட்டியின், மாணவர் சங்க தலைவர்கள் கல்வி கட்டண உயர்வை எதிர்த்து, கலெக்டரிடம் மாணவர்கள் பொதுநல மனு அளிக்க முயன்றுள்ளனர். அப்போது அவர்கள் கடத்தப்பட்டு, தாக்குதல்களுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. இதில் மோகன்பாபு உள்பட 13 பேர் கைதாகியுள்ளனர். தமிழில் மோகன் பாபு ‘சூரரை போற்று’ படத்தில் நடித்திருந்தார்.


