News April 17, 2024

வாக்கு செலுத்த பூத் ஸ்லிப் அவசியம் இல்லை

image

மக்களவைத் தேர்தலில் வாக்கு செலுத்துவதற்கு பூத் ஸ்லிப் அவசியமில்லை. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம். பூத் நம்பர், வாக்காளர் நம்பர் ஆகியவற்றை அறிய பூத் ஸ்லிப் தேவைப்பட்டால் அதனை ஆன்லைன் மூலமாகவே பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். <>ECI<<>> இணையத்தளம் மூலம் கூடுதல் விவரங்களை அறிந்துக் கொள்ளலாம்.

Similar News

News April 30, 2025

பிரபல ஹாலிவுட் நடிகை காலமானார்!

image

பிரபல ஹாலிவுட் நடிகை பிரிஸ்கில்லா பாய்ண்டர்(100) காலமானார். 1976-ல் ஹாலிவுட்டில் அறிமுகமான இவர், தொடர்ந்து 2008-ம் ஆண்டு வரை தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தார். Blue velvet, Disturbed போன்ற மெகா ஹிட் படங்களிலும் Flash, Dallas போன்ற பிரபலமான ஹிட் தொடர்களிலும் பிரிஸ்கில்லா நடித்துள்ளார். இவர் மறைவுக்கு ரசிகர்களும், திரை துறையினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். #RIP.

News April 30, 2025

மார்னிங் செய்ய வேண்டிய இந்த ‘3’ சீக்ரெட்ஸ் தெரியுமா

image

காலையில் நாம் செய்யும் சில சின்ன சின்ன விஷயங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆயுளை அதிகரிக்கும் ★எழுந்தவுடன் நன்றாக தண்ணீர் குடிப்பது, உடல் கழிவுகளை வெளியேற்ற உதவும் ★காலை நேரத்தில் செய்யும் உடற்பயிற்சி, தியானம் போன்றவை உடலையும், மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் ★எக்காரணத்திற்காகவும் காலை உணவைத் தவற விடாதீர்கள். ஊட்டச்சத்து மிக்க உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ட்ரை பண்ணுங்க. SHARE IT.

News April 30, 2025

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வேண்டும்: திமுக

image

பஹல்காம் தாக்குதல் குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடத்த வேண்டுமென டிகேஎஸ் இளங்கோவன் கோரிக்கை வைத்துள்ளார். பஹல்காமில் நடந்தது குறித்து மக்கள் தெரிந்துகொள்வதற்கு நாடாளுமன்ற விவாதம் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, சிறப்பு கூட்டத்தொடரை கூட்டி, எல்லா கட்சிகளும், இந்த விவகாரத்தில் ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்பதை உணர்த்த வேண்டுமென ராகுல் காந்தி வலியுறுத்தியிருந்தார்.

error: Content is protected !!